கரூர் மாவட்டம் வயலூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 106 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் சு சிலாதேவி உட்பட ஆறு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 7ம் தேதி ஆசிரியர் பரமானந்தன் வயது-45. என்பவர், ஐந்தாம் வகுப்பு மாணவியரை மொபைல்ஃபோனில் படம் பிடித்ததாக பெற்றோர்கள், பள்ளி தலைமையாசிரியர் சு சிலாதேவியிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ஏ.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் வயலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த அப்பகுதி மக்களும், பெற்ú றாரும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அப்போது பள்ளிக்கு வந்த தாசில்தார் மூக்கன் பொதுமக்களிடம் கூறுகையில்,””புகாருக்கு உள்ளான ஆசிரியர் பரமானந்தன், பஞ்சப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். இனிமேல் மொபைல்ஃபோன்களை பள்ளி தலைமையாசிரியிடம் ஒப்படைத்துவிட்டு தான் பாடம் நடத்த ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.
ஆசிரியரை சஸ்பென்ட் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள்தான், ஆசிரியர் மீதான நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க முடியும்,” என தெரிவித்தார். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
