விந்துவை திருடியதாக மனைவி மீது கணவர் புகார்


ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியை சேர்ந்த ஒரு இளைஞரும், ரஷியாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்தனர். திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை.எனவே அபுதாபியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்றனர்.
ஆனால் அது வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.இந்த நிலையில் ரஷியாவுக்கு திரும்பி சென்ற அந்த பெண் விவாகரத்து பெற்ற ஓரிரு மாதத்தில் கர்ப்பம் அடைந்தார். 4 மாதங்கள் கழித்து தனது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு முன்னாள் கணவர்தான் தந்தை என தெரிவித்தார். செயற்கை கருவூட்டலுக்காக மருத்துவமனையில் இருந்த விந்தணு வங்கியில் உறைந்த நிலையில் சேமித்து வைத்திருந்த கணவர் உயிரணுவை போலி கையெழுத்து போட்டு பெற்றது தெரிய வந்தது.

அதன்மூலம் ரஷியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். இதை அறிந்த அந்த வாலிபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். தற்போது தான் ஒரு குழந்தைக்கு தந்தை என்ற மகிழ்ச்சி இருந்தாலும் விவாகரத்துக்கு பிறகு உயிரணுவை திருடி குழந்தை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அபுதாபி கோர்ட்டில் தனது முன்னாள் மனைவி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"