அரவாணிகளுக்கு மடிகட்டும் விழா மற்றும் நிர்வாண பூஜை


விழுப்புரத்தை போல் நெல்லையில் இரண்டு அரவாணிகளுக்கு மடிகட்டும் விழா மற்றும் நிர்வாண பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரவாணிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம் அருகே அரவாணிகளுக்கு கூத்தாண்டவர் விழா நடப்பது போல நெல்லையில் அரவாணிகளுக்கு மடிகட்டும் விழா நடந்தது.

முன்னதாக நெல்லையை சேர்ந்த 2 அரவாணிகள் தங்களை முழு பெண்ணாக மாற்றிக் கொள்வதற்காக மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன் பின்னர் தற்போது தான் முதன்முறையாக நெல்லை வந்தனர்.

அவர்களுக்காதான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களை மும்பையை சேர்ந்த அரவாணிகள் நிலா, ஜோதி ஆகியோர் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர். அந்த 2 அரவாணிகளையும் நெல்லை அரவாணிகள் சங்க தலைவி சுமதியிடம் ஒப்படைத்து அவர்களுக்கு நள்ளிரவில் மடிகட்டும் விழா பூஜை நடந்தது.

நள்ளிரவு 1.30 மணி அளவில் மண்டபத்தின் அனைத்து ஜன்னல்கள், கதவுகளை மூடிவிட்டு இந்த பூஜை நடந்தது. பூஜையை அரவாணிகள் சங்க தலைவி சுமதி, மும்பையை சேர்ந்த நிலா, ஜோதி ஆகியோர் நடத்தினார்கள்.அவர்கள் புதிதாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 அரவாணிகளையும் நிர்வணமாக அமர வைத்து எண்ணை, மஞ்சள், தண்ணீர், பால் ஊற்றி பூஜை நடத்தினார்கள். அப்போது மற்ற அரவாணிகள் கூடியிருந்து கும்மி அடித்து சடங்கு சம்பிரதயங்களை கடைபிடித்தனர்.

அதிகாலை 3 மணிக்கு பூஜைகள் முடிந்தது. பூஜை நடத்தப்பட்ட அரவாணிகள் பால்குடம் எடுத்துகொண்டு நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றில் பால் ஊற்றி பூஜையை நிறைவு செய்தனர்.பூஜையில் கலந்து கொள்ளும் அனைத்து அரவாணிகளுக்கும் செல்வம் பெருகும் என அவர்கள் நம்புவதால் ஏராளமான அரவாணிகள் கலந்து கொண்டனர். நெல்லையில் இது போன்ற பூஜைகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"