விமானத்தில் டிரஸ்ஸைக் கழற்றிய பயணி!

யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த ஒரு பயணி தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே விமானத்தில் பயணித்த இரு போலீஸார் அந்த பயணிகை கைவிலங்கிட்டு கைது செய்து அமர வைத்தனர்.

அந்த நபரின் பெயர் கீத் ரைட். 50 வயதாகிறது. நியூயார்க்கைச் சேர்ந்தவர். இவர் வடக்கு கரோலினாவிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் சென்ற விமானத்தில் பயணித்தார். விமானத்தில் 148 பயணிகள் இருந்தனர்.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தனது உடைகளை கழற்றி நிர்வாணமானார் கீத். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விரைந்து ஓடி வந்த விமானப் பனிப் பெண் ஒருவர் போர்வை ஒன்றை எடுத்து கீத்தை மூட முயன்றார். ஆனால் போர்வையை உதறித் தள்ளினார் கீத். இதனால் மேலும் பரபரப்பு கூடியது.அத்தோடு நில்லாமல் தன் மீது பனிப் பெண் மீது ஒரு குத்து விட்டார். இதையடுத்து விமானத்தில் பயணித்த இரு போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினர் விமானப் பணியாளர்கள்.

அவர்கள் வந்து கீத்துக்கு கைவிலங்கிட்டு ஆடைகளை உடுத்தி அமர வைத்தனர். பின்னர் விமான நிலையம் வந்ததும் கீத்தைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"