கணவர்களுக்கு ஆதரவாக நிர்வாண போஸ் கொடுத்த மனைவிகள்

இங்கிலாந்து முப்படையினருக்கு ஆதரவாகவும், அவர்களது தியாகத்தைக் கெளவரப்படுத்தும் வகையிலும் அவர்களின் மனைவிமார்கள் நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர்.ஆனால் இது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளதாம்.

உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் இந்தப் பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். கேட்டால், இது முப்படையினர் நாட்டுக்காக செய்த தியாகங்களையும், எங்களது கணவர்மார்களுக்கு செய்யும் கெளரமாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று இப்பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த நிர்வாண போஸ்கள் அடங்கிய புகைப்படங்கள் காலண்டராக வரப் போகிறது.
இந்தப் பெண்கள் யாருமே இதுவரை இப்படிப்பட்ட போஸ் கொடுத்ததில்லையாம். மேலும் மாடலிங்கிலும் இருந்தவர்கள் இல்லையாம். குடும்பப் பெண்கள் இவர்கள். இதனால்தான் இங்கிலாந்தில் சர்ச்சை வெடித்துள்ளதாம்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களது மேடிட்ட வயிறுடன் போஸ் கொடுத்துள்ளனர். பலர் தங்களது கணவர்களின் தொப்பிகளை தலையில் அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். சிலர் பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளனர். மேலும் பலர் தொப்பிகளால் தங்களது அந்தரங்கப் பகுதியை மறைத்தும், பின்பக்கத்தை மறைத்தும், மார்பகங்களில் தொப்பியை மாட்டியும் வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளனர்.

இருப்பினும் பெரும்பாலான பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களைக் கொண்டு காலண்டரைத் தயாரிக்கவுள்ளார் சாரா பென்னட் தர்ஸ்டன் என்பவர்.35 வயதாகும் தர்ஸ்டனின் கணவரும் கூட ராணுவத்தில்தான் பணியாற்றுகிறார். இவரும் கூட போஸ் கொடுத்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"