தினமும் செக்ஸ் வைத்தால் விந்தணு அதிகரிக்குமாம்! ஆய்வில் நிருபணம்


வாரம் இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர்.

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு செக்ஸ் பற்றிய ஆர்வமும், அதை அறிந்து கொள்ளவேண்டும் என்ற வேகமும் அதிகம் இருக்கும். இதனால் தினசரி உறவில் ஈடுபடுவார்கள். குழந்தை பிறந்த பின்பு இருவருக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு தாம்பத்ய உறவு கூட சம்பிரதாயமாக மாறிவிடும்.

இவ்ளோதானா என்ற அலுப்பும், சலிப்பும் கூட தம்பதியரிடையே செக்ஸ்க்கு இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர்.

இன்றைக்கு தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த இடைவெளிக்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங், இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது என்று கூறியுள்ளார்.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் தாம்பத்ய உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது என்று தம்பதிகளுக்கு இன்பகரமான செய்தியை கூறியுள்ளார்.

தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது, என்று மருத்துவர் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"