பெண்களின் தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதிகளை அழகாக்க!


பெண்களுக்கு அதிகப்படியாக கொழுப்பு சேரும் இடம், தொடை, இடுப்பு மற்றும் பின் பகுதி தான்! `குழி விழுந்த', `மேடு பள்ளமான' தோற்றத்தை தரும். இந்த கொழுப்புக்கு பெயர் தான் செலுலைட்.

எண்ணையில் பொரித்த உணவு, மது, கஃபைன் ( காபியில் உள்ளது) சர்க்கரை ஆகியவை செலுலைட் உருவாக முக்கிய காரணம். அத்தோடு, ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவது, பரம்பரையாக வருவது, உடற்பயிற்சி அதிகம் இல்லாதது, இவற்றாலும் செலுலைட் உருவாகிறது.

வருவதற்கு முன் காப்பது நல்லது, என்பதை மறந்து விடாதீர்கள். கொழுப்புச் சத்து உள்ள உணவை சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்தால் பயனில்லை. உடற்பயிற்சியால் தற்போது இருக்கும் செலுலைட்டை தான் குறைக்க முடியும்.

உணவு கட்டுப்பாட்டால் தான் செலுலைட் உருவாகுவதை தடுக்கலாம். எடை குறைக்க பத்து நாள் பட்டினி கிடந்தால் பயனில்லை. இந்த வகையான டயடிங் உங்கள் தசைகளை குறைத்து உங்களை பலவீனமாக்கும்.

கொழுப்பு அப்படியே தங்கிவிடும். வறுத்த, பொரித்த உணவுப் பொருட்கள், நெய், அசைவ உணவு ஆகியவற்றை சாப்பிடுவது குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது 1/2 மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்தால் தான் பயனளிக்கும்.தண்ணீர் குடிப்பது குறைந்தாலும் செலுலைட் உருவாகும். அதனால் தினமும் 10 டம்ப்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

நம் முன்னோர்கள் தேங்காய் நாறால் உடலை தேய்த்து குளிப்பது வழக்கம். இது எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் நாறை, உடலை தேய்க்கும் பிரஷ் போல் உபயோகிக்கவும். பிளாஸ்டிக் பிரஷை விட இது பன்மடங்கு சிறந்தது.

லைபோஅக்சன் :- இந்த முறையில் ஒரு சின்ன டியூப்பை கொழுப்பு இருக்கும் இடத்தில் விட்டு, கொழுப்பு உறிஞ்சப்படுகிறது. இதனால் கொழுப்பு குறைந்தாலும் வளவளப்பான தோற்றத்தை அந்த இடம் இழந்து விடுகின்றது. அது மட்டுமல்லாமல் இதில் அதிகமாக வலி ஏற்படும். ஒரு மாதம் வரை தழும்புகள் நீடிக்கும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"