இங்கிலாந்தின் டார்சட் கவுன்டி போர்ன்மவுத் பகுதியை சேர்ந்தவர் டேவினா டிராவி (42). ஐந்து குழந்தைகளுக்கு தாய். கணவனை பிரிந்து வாழும் அவருக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. சிறிது காலத்துக்கு பிறகு டேவினாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் நெருங்க தொடங்கினார் காதலன். டேவினா எரிச்சல் அடைந்தார். அவனை பழிவாங்க திட்டம் போட்டார்.
பள்ளி செல்லும் சிறுவர்கள் இருவரை (வயது 13, 14) பிடித்தார். காதலன் பழகும் பெண்ணின் சொகுசு காரை அடித்து நொறுக்குகிறீர்களா என்று அவர்களிடம் கேட்டார். நொறுக்கினால் என்ன தருவீர்கள் என்று சிறுவர்கள் அப்பாவியாக கேட்க.. ‘செக்ஸ்’ என்று படாரென்று பதில் சொன்னார் டேவினா.
புரிந்தும் புரியாத வயது சிறுவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். டேவினா காட்டிய காரை அடித்து நொறுக்கிவிட்டு, ஆதாரத்துக்காக கார் நம்பர் பிளேட்டுடன் டேவினாவிடம் வந்தனர். ‘கொடுத்த வாக்கை’ மிகச்சரியாக காப்பாற்றினார் டேவினா. இந்த சம்பவம் நடந்தது 2010-ம் ஆண்டு.
பின்னர், விவகாரம் வெளியே தெரியவந்துவிட்டது. 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களிடம் வலுக்கட்டாய செக்ஸ் உறவு கொண்டதாக டேவினா மீது வழக்கு போடப்பட்டது. ‘அப்படியெல்லாம் நான் எதுவும் செய்யல’ என்று சொல்லிவந்த டேவினா, 2 வார விசாரணைக்கு பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, செக்ஸ் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.