Microsoft Word 2007 இல் எழுதியதை வேறு மொழிக்கு மொழிமாற்றம் செய்வது எப்படி?


உங்களுக்கு தேவையான ஒரு கட்டுரையின் பகுதியை Microsoft Word 2007 இல் Copy பண்ணிக்கொள்ளுங்கள்.பின்னர் தேவையான பகுதியை உங்கள் mouse இன் உதவியுடன் highlight பண்ணிக்கொள்ளுங்கள் அல்லது Edit என்ற பகுதிக்கு சென்று Select All என்ற தெரிவை அழுத்துவதன் மூலம் முழு தொகுதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.



அடுத்து Menu Bar இல் இருக்கும் Review button ஐ தேர்வு செய்யுங்கள்.



அதில் வரும் Translate என்ற தேர்வை அழுத்துங்கள்.



இதன்போது ஒரு task pane உங்கள் கணினித்திரையில் தோன்றும்.



இதில் எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ய போகின்றீர்கள் என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உடனடியாகவே அந்த தேர்வின் கீழ்ப்பகுதியல் மொழி பெயர்க்கப்பட்ட பகுதி தெரிவதை காணலாம்.



நீங்கள் விரும்பும் மொழி உங்கள் கணினியில் தோன்றாவிட்டால் Translation options என்ற தேர்வினை அழுத்துங்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"