ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை வேகமாக படிக்க இலவச மென்பொருள்


ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளையோ கட்டுரையையோ வேகமாக படிக்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கிலப்புலமை மட்டும் போதாது, ஆங்கிலப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை படிக்க வேண்டும் என்றால் கூட சில நேரங்களில் நமக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு இலவச மென்பொருள் மூலம் நாம் ஆங்கிலம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்ளலாம்

ஆங்கிலத்தை வேகமாக பேசுவது ஒரு கலை என்றால் ஆங்கில வார்த்தைகளை வேகமாக படிப்பதும் ஒரு கலைதான். இப்போதுதான் ஆங்கிலம் கொஞ்சம் வேகமாக வருகிறது என்று சொல்லும் நபர்கள் கூட ஆங்கில வார்த்தைகளை வேகமாக படிக்க இந்த மென்பொருள் உதவும் இங்கு கொடுத்திருக்கும் முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

இந்த மென்பொருளை தரவிரக்கியதும் நம் கணினியில் நிறுவத் தேவையில்லை உடனடியாக பயன்படுத்தலாம். ஆன்லைன் -ல் மட்டும் தான் பயன்படுத்தமுடியும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இந்த மென்பொருளை திறந்து வலது பக்கம் இருக்கும் open file என்பதை சொடுக்கி நாம் படிக்க விரும்பும் Text கோப்பினை தேர்வு செய்யலாம். அல்லது அதற்கு அடுத்தாக இருக்கும் கட்டத்திற்குள் விரும்பிய வார்த்தைகளை தட்டச்சு செய்யலாம்.

அடுத்து இடது பக்கத்தின் மேல் இருக்கும் Word interval என்பதில் ஒவ்வொரு வார்த்தையும் நாம் படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (செகன்ட்ஸ்)எத்தனை நொடி என்ன என்பதை கொடுக்கவும் முதலில் சற்று அதிகமாக வைத்துக்கொள்ளவும் அதன் பின் நேரத்தை குறைத்து கொண்டே வரலாம்.

நேரம் கொடுத்து முடித்த பின் நமக்கு விரும்பிய வண்ணத்தை தேர்ந்தெடுத்துவிட்டு முழுத்திரையில் வர வேண்டும் என்றால் Full Screen என்பதை தேர்ந்தெடுத்து டிக் செய்து கொள்ளவும். அடுத்து Show Reader என்ற பொத்தானை அழுத்தி நாம் பயிற்சியை தொடங்கலாம். இடையிடையே pause செய்தும் படிக்கலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"