மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கான கணித நீட்சி


மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பை பயன் படுத்துபவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள்,ஆராய்ச்சியாளர்கள், கணித சமன்பாடுகளை வேர்டு போன்ற பயன்பாடுகளில் உபயோகிக்க சற்றே சிரமப்பட்டிருக்கிறார்கள்.இவர்களது இந்த சிரமத்தை மனதில் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்,மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கான கணித நீட்சியை, தனியாக வழங்கி வருகிறது.


இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, புதியதாக ஒரு ரிப்பன் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி எளிதாக கணித சமன்பாடுகளை அமைக்க முடியும்.
 
சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். 


இதிலுள்ள Equation Wizard மிகவும் தரமுள்ளதாக அறியவருகிறது. 


இது ஒரு நீட்சி மட்டுமே!, இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Unveils Microsoft Math என்ற மென்பொருள் இதை விட சிறப்பாக உள்ளது. ஆனால் இதன் விலை $20.

Microsoft Math-ஐ தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"