வேலை கேட்டுப் போன இளம்பெணை மயக்கி ஆபாசப்படம் எடுத்த சாமியார்


வேலை கேட்டுப் போன இளம்பெண் ஹேமலதாவை மயக்கி, ஆபாசப்படம் எடுத்து, தொடர்ந்து அவரை தனது வக்கிர வடிகாலாகப் பயன்படுத்திக்கொண்ட ஈஸ்வர ஸ்ரீகுமார் சாமியார் அதுவரை பெரிதாக புகார் குறித்து அலட்டிக்கொள்ளாமல் இருந்த சாமியார் ஈஸ்வரகுமார், குபீரென எஸ்கேப் ஆனார். தலைமறைவு நிலையிலேயே அவர் முன்ஜாமீனுக்கு முயல… கோர்ட்டோ தள்ளுபடி பண்ணிவிட்டது.

இதைத்தொடர்ந்து “இனி முன்ஜாமீன் போடவேண்டாம்.தலைமறைவும் ஆகவேண்டாம். இப்படிச் செய்வது குற்றத்தை ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும்’ என ஈஸ்வர குமாருக்கு அவரது வழக்கறிஞர்கள் அட்வைஸ் செய்ய…மறுபடியும் நண்பர்கள் மத்தியில் தலைகாட்ட ஆரம்பித்தார் அவர்.

இந்த நிலையில் ஈஸ்வர குமாரின் மனைவி லலிதா,“”என் கணவர் துறவி அல்ல, குருஜிதான். அவருக்கு குடும்பம் இருக்கிறது. அவர் பெண்களிடம் தவறு செய்யக்கூடியவர் அல்ல. அப்படியிருந்தால் நானே அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன். அந்த ஹேமலதா சரியான பெண் அல்ல” என்றார் குமுறலாய்.

“”சிங்கப்பூர் போலீஸ் உங்கள் குடும்பத்தையே 27 நாட்கள் தங்கள் கஸ்டடியிலேயே வைத்திருந்ததாகச் சொல்கிறார்களே… அதிலும் பெண் தொடர்பாக சாமியார் நடத்திய லீலைகள் தொடர்பான புகார்தான் என தகவல் வருகிறதே” என்றோம் அவரிடமே.சாமியாரின் மனைவி லலிதாவோ… “”அதுபற்றி இப்போது பேசத்தேவையில்லை.

இந்த வழக்குக்குத் தேவையில்லாத விவகாரம்” என முடித்துக் கொண்டார். இதற்கிடையே புகார் தந்த ஹேமலதாவை 17-ந் தேதி மதியம் விசாரணைக்கு அழைத்த மாம்பலம் போலீஸார், பெண் காக்கிகள் முன்னிலையில் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தி…

ஹேமலதா கொடுத்த பதில்களை பதிவு செய்தனர்.இதில் மேலும் பல அதிரடிப் புகார்களை ஹேமலதா, சாமியார் மீது சொல்லியிருக்கிறார் என காவல்துறைத் தரப்பிலிருந்தே தகவல் கசிய…

இதுகுறித்து ஹேமலதாவின் வாக்கு மூலம்.…”"நான் கொடுத்த புகார்ல சாமியாரின் வக்கிரங்கள் முழுவதையும் என்னால் விவரிக்க முடியலை. ஆனா பெண் போலீஸ்காரங்க துருவித் துருவிக் கேட்க… அவன் பண்ணிய அத்தனை அசிங்கங்களையும் சொல்லிட்டேன். அதில் கொஞ்சத்தைத்தான் உங்க ளிடம் பகிர முடியும். வேலை கேட்டுப்போன என்னை மயங்கவச்சி படம் எடுத்தவன்… அந்தப் படத்தை உன்னிடமே கொடுத்துடறேன் வான்னு கூப்பிட்டு பலமுறை நாசம் செஞ்சான். வரமுடியாதுன்னு சொன்னா… இண்டர்நெட்ல என் படங்களைப் போடறதா மிரட்டுவான்.

சிலநேரம்… யாராவது ரவுடிகளை வச்சி… “ஏய் நீ என்ன பத்தினித்திலகமா… சாமியார் கூப்பிட்டா வந்துட்டுப் போக வேண்டியதுதானே. நீ வராட்டி நாங்க வீடு பூந்து தூக்கிட்டுப் போவோம். அப்ப நாங்களும் தொடுவோம்னு கேவலமா மிரட்ட வைப்பார்.பயந்துபோய் அவனை சந்திப்பேன். அவன், வரும்போதே யார்ட்டயாவது சொல்லி

“ராயல் சேலஞ்ச்’ விஸ்கி வாங்கி அதை எடுத்துட்டு வான்னு நிர்பந்தம் பண்ணுவான். அடையாறு வீட்டுக்கும் தி.நகர் இந்தி பிரச்சார சபா தெரு அபார்ட்மெண்ட்டுக்கும் மாறி மாறி கூப்பிடுவான். அங்க போனதும் என் கையாலேயே மதுவை ஊற்றிக்கொடுக்கச் சொல்லி குடிப்பான்.

பிறகு என் உடைகளில் கை வைப்பான். அப்புறம் முரட்டுத்தனமா கண்டபடி நடப்பான். விதவிதமா… என்னையும் ஈடுபடும்படி வற்புறுத்தி அடிப்பான். அதேபோல் ஆபாசப் படங்களை டி.வி.யில் ஓடவிட்டு அதேபோல நடந்துக்குவான். கதறினாலும் விடமாட்டான். சிலநேரம் அடிச் சித் துன்புறுத்துவான்.

நான் தேம்பி அழுதாதான் அவனுக்கு சிலநேரம் மூடே வரும். இண்டர்நெட்ல என் படம் வந்துடக் கூடாதேங்கிற ஒரே பயத்தில் இவ்வளவுநாள் அவன் கொடுமைகளைப் பொறுத்துக்கிட்ட நான்… ஒருகட்டத்தில் அவனோட வக்கிரங்களுக்கு ஈடுகொடுக்க முடியாம தற்கொலை பண்ணிக்கக்கூட முடிவு செஞ்சேன்.

செத்தா என் ஒரே மகன் அனாதையாயிடுவானேன்னுதான் அந்த முடிவை கைவிட்டுட்டு போலீஸுக்குப் போனேன்.நீ எங்க போனாலும் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் மினிஸ்ட்ரி ஆப் லேபர்ல மெம்பர். கடலோர பாதுகாப்புப் படையில் ஆலோசகரா இருக்கேன்.

பெரிய பெரிய அதிகாரிகள் என் கைல இருக்காங்க. என் சங்கரமடத் தொடர்புகள் பத்தி யெல்லாம் உனக்குத் தெரியாது. நீ கொடுக்கும் புகார்கள் என் கைக்கே வரும்னு பலவாறா மிரட்டினான்.

அதேபோல் நான் போலீஸில் கொடுத்த புகார்களை அவன் கையில் வச்சிக்கிட்டு வாசிச்சிக் காட்டு வான். இப்படி, தன் செல்வாக்கை பலமா வளர்த்துக்கொண்டு என்னைப் போன்ற அப்பாவிகளை நாச மாக்குறதுதான் அவன் பொழுது போக்கு. சிங்கப்பூர்ல இவன் வீட்டில் வேலை பார்த்த லூஸிங்கிற கேரளப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்து பலமுறை நாசமாக்கியிருக்கான்.

அந்தப் பொண்ணு தற்கொலை பண்ண… இதில்தான் சிங்கப்பூர் போலீஸில் இவன் சிக்கினான். இந்தியா வந்த பிறகு பாக்யாங்கிற இளம் பெண்ணை நாசப்படுத்தினான். அவளும் தற்கொலைபண்ணிக்கிட்டா. இதேபோல் நானும் சைலன்ட்டா செத்துப் போயிடுவேன்னு நினைச்சான்.

நான் இனி சாகப் போறதில்லை. அவனோட முகமூடியைக் கிழிச்சி அவனை சிறைக்கு அனுப்பாம நான் ஓயப்போறதில்லை” என ஆவேசம் வந்தவர்போல் கொந்தளித்தார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"