ஒஸ்ட்ரிய காடொன்றில் அரசியல்வாதி ஒருவர் உடல் உறவு கொண்ட காட்சிகள் வீடியோ கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள், இயற்கை காட்சிகளை பதிவு செய்வதற்காக இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஒஸ்ட்ரியாவின் Carinthia என்னும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், இந்த சம்பவத்தில் பாலுறவில் ஈடுபட்ட அரசியல்வாதிக்கு சாதகமான நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலுறவில் ஈடுபடும் காட்சிகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்திருந்தால் நட்ட ஈடு வழங்க நேரிடலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கமரா ஒன்றை பொருத்துவதற்கு முன்னர் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அல்லது கமரா பொருத்தப்பட்டிருந்தால் அது தொடர்பிலான சமிக்ஞைகள் ஏதெனும் வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் தகவல் பாதுகாப்பு தொடர்பான அரச சார்பற்ற நிறுவனமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பறவைகள் உணவூட்டும் விதங்களை கண்காணிக்கும் நோக்கில் இரகசிய கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக, கமராவை பொருத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.