விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுடன் வாடிக்கையாளர்களும் கைது


விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையின் போது பாலியல் தொழிலாளிகளுடன் உடன் இருக்கும் வாடிக்கையாளர்களையும் கைது செய்யலாம் என்று மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த அக்டோபர் 4ம் தேதி மும்பையின் கிரான்ட் ரோடு பகுதியில் உள்ள சிம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 400 பெண்களை மீட்டனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் 124 பேரையும் அவர்கள் கைது செய்து விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

வாடிக்கையாளர்களை கைது செய்தது சட்ட விரோதமானது என்று அறிவிக்க கோரி பிரபான்ஜன் தவே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கன்வில்கர், தானுகா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “வாடிக்கையாளர்களை கைது செய்தது சரியா, தவறா என்பது, ஒவ்வொரு வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் .

பாலியல் தொழில் பெண்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை கைது செய்யலாம் என்றும் தீர்ப்பளித்தது. இந்த பொதுநலன் வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் தவேக்கு 25,000 அபராதம் விதிக்கவும், அதை ஒரு வாரத்தில் செலுத்தவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"