
பெரும்பாலும் மைக்ரோசாப்ட் பயன்படுத்தும் கணினிகளில் இன்றும் ஆபிஸ் 2003 போன்ற ஆபிஸ் மென்பொருள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் ஆபிஸ் 2007 ,மற்றும் 2010 -ல் உருவாக்கப்படும் கோப்புகளை திறக்க நமக்கு சிரமம் ஏற்படுகிறது இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு இணையதளம் உள்ளது.
இந்ததளத்திற்கு சென்று படத்தில் இருப்பது போல் Choose என்ற பொத்தானை அழுத்தி நம் DOCX கோப்புகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
கோப்புகளை பார்க்க வேண்டும் என்றால் View என்பதையும் பிரிண்ட் செய்ய வேண்டும் என்றால் Print என்பதையும், எடிட் செய்ய வேண்டும் என்றால் Edit என்பதையும், பார்வேட் செய்ய வேண்டும் என்றால் Forward என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு Next என்ற பொத்தானை அழுத்தவும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த docx கோப்புகளை எளிதாக எடிட் செய்து சேமிக்கலாம்.
இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க