நியூசிலாந்து நாட்டில் உல்லாசப் பயணிகளை ஈர்த்து எடுக்கும் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது ஒரங்கோ வலயத்தில் அமைந்து இருக்கும் கர்ட்றோனா பிரா வேலி.வீதி ஓரத்தில் உள்ள வயர் வேலியில் பிராக்கள் தொங்கவிடப்படுகின்றன.
1998 ஆம் ஆண்டின் நத்தார் பண்டிகைக்கும் 1999 ஆம் ஆண்டின் புது வருடத்துக்கும் இடைப்பட்ட நாட்களில் முதன்முதல் இங்கு பிராக்கள் தொங்கவிடப்பட்டன.முதலில் நான்கு பிராக்களை காண முடிந்தது.
ஆயினும் யார், எதற்காக இங்கு பிராக்களை தொங்க விட்டனர்? என்பது மர்மமாகவே அப்போது இருந்தது.இருப்பினும் இச்செய்தி காட்டுத் தீ போல பரவியது.இதை அடுத்து ஏராளமான பெண்கள் இங்கு பிராக்களை தொங்க விட தொடங்கினர்.
இங்கு இருந்து பிராக்களை அகற்ற சிலர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு இருந்தனர்.ஆயினும் அம்முயற்சிகள் வெற்றி பெறவே இல்லை.இன்று இங்கு பல்லாயிரக்கணக்கான பிராக்கள் காட்சி தருகின்றன.
உலகின் மிக நீளமான பிரா வேலி என்கிற சாதனையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றது.