மீடியா ப்ளேயர்கள் ஃபைல் பெயரை வாசிப்பதில்லை. அதற்கு உள்ளே Title என்ற பெயரில் என்ன இருக்கிறதோ அதைத்தான் டிஸ்ப்ளே செய்யும்.
ஒரு எம்.பி. 3 ஃபைலை ரைட் க்ளிக் செய்து ப்ராபர்டீஸ் போய் டீடெயில்ஸ் க்ளிக் செய்து பார்த்தால், அதில் பலவித சங்கதிகள் இருக்கும். அவற்றில் முக்கியமானவை:
1. Title
2. Artist
3. Album
4. Composer
5. Genre
இந்த 5 விஷயங்களையும் நீங்க modify செய்தால், உங்கள் மீடியா ப்ளேயரில் ஆர்டிஸ்ட் ரீதியாகவும், ஆல்பம் ரீதியாகவும் கம்போஸர் ரீதியாகவும், ஜென்ரி ரீதியாகவும் அதுவாகவே சார்ட் செய்து உங்களுக்கு வழங்கும். இந்த Tag-களை modify செய்யாவிட்டால், கன்னாபின்னாவென்று இருக்கும்.
ஒவ்வொரு ஃபைலையும் ரைட் க்ளிக் செய்து modify செய்வது என்பது கஷ்டமான காரியம். இதைச் சுலபமாகச் செய்யத்தான், விண்டோஸ் மீடியோ ப்ளேயர், ஐடியூன்ஸ் என்று மென்பொருள்கள் இருக்கின்றன. நீங்கள் ஃபோல்டரில் டீடெய்ல்ஸ் வியூவில் வைத்து பார்த்தால் எப்படித் தோன்றுமோ, அப்படி இந்த மென்பொருள்களில் தோன்றும். ஆனால், ஃபோல்டரில் அப்படியே modify செய்ய முடியாது. ஐடியூன்சிலோ இல்லை விண்டோஸ் மீடியா ப்ளேயரிலோ மாடிஃபை செய்ய முடியும். அவ்வளவு தான்.
ஆர்டிஸ்ட் Tag -ல் ஆர்டிஸ்ட் தானே என்று பாடல் பாடியவர்கள் பெயரை கமா போட்டு கமா போட்டு எழுதக் கூடாது. அப்படி எழுதுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இண்டெர்நெட்டிலிருந்து பாடலை தரவிறக்கம் செய்தால் இப்படித்தான் இருக்கும். இதை நாம் மாற்ற வேண்டும்.
எப்படி மாற்றலாம்?
- ஆர்டிஸ்ட் என்பது மேஜர் கேட்டகிரி
- ஆல்பம் என்பது சப் கேட்டகிரி
அதாவது ஆர்டிஸ்டுக்குள் ஆல்பம் அடக்கம்.அதற்கேற்றவாறு வகைப்படுத்த வேண்டும்.
ஆல்பம் டேக்கை மாடிஃபை செய்ய வேண்டும். ஆர்டிஸ்டுக்குள் ஆல்பம். Classical songs என்னும் ஆர்டிஸ்ட் டேக்கிற்குள் ஆல்பம் டேக்குகளை Carnatic Vocal, Instumental, Hindustani Vocal இப்படி செய்யலாம்.
Devotional Songs என்னும் Artist டேக்கிற்குள் Kanthar Sashti Kavasam, Murugan Songs, Devi Songs, Krishna Ganam, Islamic Songs, Christian Songs இப்படி செய்யலாம்.
Hindi Songs என்னும் Artist டேக்கிற்குள் Hindi Film Songs, Gazal Songs, Hindi Pop Songs என்று வகைப்படுத்தலாம்.
மற்றபடி Very Old Songs, Old Songs - இப்படி தமிழ் திரைப்படப் பாடல்களுக்கான Artist டேக்கிற்குள் ஆல்பம் டேக்குகளை படங்கள் பெயரிலேயே வகைப்படுத்தலாம்.
Composer டேக்கில் இசையமைப்பாளர் பெயரை எழுதிவிட்டால், Composer டேக்கில் சார்ட் செய்து கேட்க மிகவும் வசதியாக இருக்கும்.
Genre என்னும் இடத்தில் பாடலின் மூடு இதை எழுதலாம். இங்கிலீஷ் காரன் மாதிரி rock, pop, jazz என்று எழுதாமல், நம்ம ஊரு ஸ்டைலில் kuthu, thaalaattu, Duet, Sad Song, Thaththuvam, Folk இப்படி எழுதலாம்.
MGR Duet Hits, Rajini Hits, Suseela Hits, இதை எப்படி தயார் செய்வது?
இதற்கு ப்ளே லிஸ்ட் கிரியேட் செய்து கொள்ளலாம். இது விண்டோஸ் மீடியா ப்ளேயரிலோ இல்லை ஐடியூன்ஸிலோ மிகவும் சுலபமாகவும் செய்யலாம். ஐடியூன்சில் ஒரே ரீதியில் உள்ள பாடலை செலக்ட் செய்து File - New Play List From Selection இதை க்ளிக் செய்தால் ப்ளே லிஸ்ட் ரெடி.
சேன் டிஸ்க், க்ரியேடிவ் மாதிரி ஐட்டங்களில் விண்டோஸ் மீடியா ப்ளேயரிலேயே ப்ளே லிஸ்ட் க்ரியேட் செய்து விட்டு, sync செய்து விடலாம்.
ஐடியூன்ஸ்:
அப்புறம் ஐபாடில் சிங்க் ஆவது, ஐடியூன்ஸில் லைப்ரரியில் அர்ரேஞ்ச் செய்துவிட்டால், ஒரே ஒரு பட்டன் தான்.ஐபாடுக்காக கன்வெர்ட் பண்ணியதற்குப்பிறகு, ஐடியூன்ஸ் லைப்ரரியில் சில ஃபைல்கள் ப்ளே ஆனாலும், ஐபாடில் ப்ளே ஆகாது. ஆனால், கஷ்டப்பட்டு ஒருமுறை கன்வெர்ட் செய்துவிட்டால், விடியோ தெள்ளத்தெளிவாக இருக்கும்.
எம்.பி.3 பாடல்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. விண்டோஸ் மீடியா ஆடியோ கோப்புகளாக இருந்தால் அதுவாகவே கன்வெர்ட் செய்து கொள்கிறது. இண்டெர்நெட்டில் டவுன்லோடு செய்யுங்கள். அப்புறம், File - Add File to Library. அவ்வளவு தான்.
Edit - Preferences - Advanced - இதில் போய் Keep iTunes media folder Organized, copy files to itunes media folder when adding to library இந்த ரெண்டையும் செக் பண்ணிடுங்க. நீங்க எந்த ஃபோல்டரிலிருந்து பாடல்களை இழுத்தாலும், ஆட்டோமேடிக்கா, ஐடியூன்ஸ் மீடியா ஃபோல்டரில் அதோட காப்பி ஒன்னு வந்திரும், அங்கே இருக்கும் ஃபைல்கள் அழகா ஆர்டிஸ்ட், ஆல்பம் வாரியா அரேஞ்ச் ஆகி இருக்கும். நாம ஒன்னும் செய்ய வேண்டியதில்லை.
நீங்க லைப்ரரியை கன்சாலிடேட் பண்ணலைன்னா, ஒரு முறை File - Library - Organize Library போய் அங்கே Consolidate Files ஐ செக் பண்ணிடுங்க. நீங்க அங்கங்கே வைத்திருந்த பாடல்கள் எல்லாத்துக்கும் ஆட்டோமேடிக்கா ஐடியூன்ஸ் மீடியா ஃபோல்டரில் ஒரு காப்பி ரெடி பண்ணி வச்சிக்கிடும். ஒரிஜினல் பாடலை டெலிட் பண்ணிடலாம்.
Source பாடல்களை பல் வேறு ஃபோல்டர்களில் வைத்திருக்கலாம். மறந்தாப்போல், எப்பொழுதாவது அந்தப் பாடல்களை டெலிட் பண்ணிட்டீங்கன்னா, ஐடியூன்ஸ் லைப்ரரியில் அந்தப் பாடல் இருக்காது. அதனால இந்த File - Library - Organize Library - Check - Consolidate Files பண்ணீட்டிங்கன்னா, Music ஃபோல்டரில் itunes னு ஒரு ஃபோல்டர் அதுவா க்ரியேட் பண்ணி, அந்தப் பாடல்கள் எல்லாத்துக்கும் ஒரு காப்பி கிரியேட் பண்ணிடும். அப்புறமா நீங்க அங்கே இங்கே வச்சிருந்தது எல்லாத்தையும் டெலிட் பண்ணிடலாம். இந்த itunes ஃபோல்டரில் மட்டும் பாடல்கள் இருக்கும்.
அதுக்கப்புறம் Edit - Preferences - Advanced - இதில் போய் Keep iTunes media folder Organized, copy files to itunes media folder when adding to library இந்த ரெண்டையும் செக் பண்ணிட்டா, இதுக்கப்புறம் லைப்ரரியில் சேர்க்கும் ஒவ்வொரு பாடலுக்கும் அந்தந்த நேரத்திலேயே காப்பி உண்டாக்கிக்கிடும். ஆக, ஒரே ஒரு ஃபோல்டர், உங்க Music ஃபோல்டருக்குள் itunes ஃபோல்டர் - அதுவும் itunes-ஏ ஆர்கனைஸ் பண்ணிக்கிடும்.