சமூக இணையத்தளங்களின் மூலம் அரங்கேறும் காம லீலைகள்


இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.

இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர்.

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும் பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர். இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"