கிராபிக்ஸ் கோப்புகளை பயன்படுத்த இலவச மென்பொருள்


இணையத்தில் நூற்றுகணக்கான கிராபிக்ஸ் பைல்கள் காணப்படுகிறது. அதில் ஒரு சில மட்டும் நம் கணினியில் திறக்கும் மற்றவைகள் நம் கணினியில் திறக்க முடியாது. காரணம் அந்தந்த பைல்களுக்கு தேவையான support பைல்கள் நம் கணினியில் நிருவப்படாததே காரணம். இதற்க்கு ஒவ்வொன்றாக நாம் தேடி சென்று support பைல்கள் சேர்ப்பது என்பது சுலபமான காரியமல்ல. இந்த குறைகளை தவிர்க்கவே இந்த மென்பொருள் நமக்கு பயன்படுகிறது.

முதலில் நீங்கள் டவுன்லோட் செய்த பைலை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.இடது பக்கம் கணினியின் டிரைவ்கள் காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றினை செலக்ட் செய்ததும் அந்த டிரைவில் உள்ள அனைத்து படங்களும் வலது பக்கத்தில் உள்ள இடத்தில் தெரியும்.இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருள் சுமார் 400 வகையான கிராபிக்ஸ் பைல்களை திறக்க முடியும்.

இந்த மென்பொருளில் Converter வசதியும் உள்ளது. எந்த படத்தையும் நமக்கு தேவையான வடிவில் அமைத்து கொள்ளலாம்.இதில் Screen Shot எடுக்கும் வசதியும் உள்ளது.

இதில் உள்ள இன்னொரு அற்ப்புத வசதி உங்களுக்கு தேவையான படத்தை நீங்கள் இமெயிலும் செய்யலாம்.இதை பயன்படுத்துவது எளிதாக உள்ளது.
பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது.

நம் படங்களை Slide Show ஆக பார்க்கும் வசதியும் உள்ளது.இந்த மென்பொருள் சுமார் 43 மொழிகளுக்கு உகந்ததாக உள்ளது.மிகசிறிய அளவே உடையது. ஆனால் வேலையை கனகச்சிதமாக செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும் 

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"