சிறுவர்களுக்கான பயனுள்ள தேடு இயந்திர தளங்கள்


இந்தத் தேடு இயந்திரங்கள் பாதுகாப்பானவை மட்டும் அல்ல; சுட்டிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மிகவும் ஜாலியானவையும்கூட. உதாரணத்துக்கு, 'அகா-கிட்ஸ்' டாட் காம் தேடு இயந்திரத்தை முதலில் பார்ப்போம். இதன் முகப்புப் பக்கத்தை (ஹோம் பேஜ்) பார்த்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும். சின்னச் சின்ன பொம்மைகளோடு வரவேற்கும்.

இதில், கூகுளில் இருப்பது போலவே தேடுவதற்கான கட்டம் இருக்கிறது. முதலில் தேடுவதற்கான பெயருக்கு உரிய வார்த்தையை டைப் செய்து தேடலாம். அதன் பிறகு தேடல் பட்டியல் தோன்றும். அதில் இருந்து தேவையான தகவலை எடுத்துக் கொள்ளலாம். எல்லாமே உங்களுக்குப் பொருத்தமான தளங்களாக இருக்கும்.

"ஆகா கிட்ஸ்"
இந்தத் தேடு இயந்திரம் கொஞ்சம் விஸுவலானது. அதாவது, படங்களுடன் தகவல்களும் தேவையா என்று தீர்மானித்துக்கொள்ளலாம். தேடுவதற்கு முன்பே தகவல்கள் சாதாரணமாகத் தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாகத் (விஷ§வலாக) தோன்ற வேண்டுமா எனத் தேர்வு செய்துகொள்ளலாம்.

கார்ட்டூன், விளையாட்டுகள், பொம்மை செய்தல் ஆகிய தனிப் பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான பகுதியும் இருக்கிறது. அதுமட்டும் அல்ல... தேடல் கட்டத்துக்கு மேலேயே பல குறிச் சொற்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றிலும் க்ளிக் செய்து பார்க்கலாம்.
இணையதள முகவரி:http://aga-kids.com/

'கிட் ரெக்ஸ்'
கூகுளைப் பயன்படுத்தி சிறுவர்களுக்குப் பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது. இதில் சுட்டிகளுக்குத் தனிப் பகுதியும், பெற்றோர்களுக்குத் தனிப் பகுதியும் இருக்கிறது. சுட்டிகளுக்கான பகுதியைக் க்ளிக் செய்தால், குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களைப் பார்க்கலாம். பெற்றோர் பகுதியில் இந்தத் தேடு இயந்திரம் பற்றியும், இது ஏன் குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இணையதள முகவரி:http://www.kidrex.org/

'ஆஸ்க் கிட்ஸ்'
இதில் உங்கள் சந்தேகத்தையும் கேள்வியாகக் கேட்டுத் தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு உரிய பதில்கள் இதில் தொகுக்கப்பட்டு உள்ளன. இதைத் தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.
இணையதள முகவரி:http://www.askkids.com

'கிட்ஸ் க்ளிக்'
தேடு இயந்திரம் சிறுவர்களுக்காகவே நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே, ஹோம் வொர்க்குக்குத் தேவையான தகவல்களை இதில் தைரியமாகத் தேடலாம்.
இணையதள முகவரி:http://kidsclick.org

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"