பாலியல் வன்முறைகள் என்றால் என்ன?


பாலியல் வன்முறைகள் இப்பொது அதிகம் கேள்விப்பட ஆரம்பிக்கின்றன.  கற்பழிப்பு மட்டுமல்ல. ஆனால், பாலியல் துஷ்பிரயோகம், கட்டாய திருமணம் , திருமணக்கற்பழிப்பு என்பதையும் உள்ளடக்கும்.

ஏன் பாலியல் வன்முறைகள் காணப்படுகிறது?
1. ஆண் ஆதிக்கம்
2. விலக்கி வைத்தல்
3. பாரம்பரிய சமூகத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுதல்
4. குடும்பங்கள் பிரிதல்
5. பிரிவின் போது சமூக உதவி குறைவு
6. மற்றோரை நம்பி வாழவேண்டிய நிர்ப்பந்தம்
7. சுகாதார சேவைகளின் சீர்குலைவு
8. பெண்கள் குழந்தைகளின் உதவி வழங்கும் நிறுவனங்களை அடைய முடியாத நிலை

பாலியல் வன்முறைகள்
1. வீட்டு வன்முறை
2. பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்
3. கடத்தல்
4. கட்டாய திருமணம்
5. பிழையான பாரம்பரிய முறைகள்
6. கூட்டு கற்பழிப்பு
7. கொலை

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பொதுவாக கணவராலோ, ஆண் துணையாலோ மேற்கொள்ளப்படும். இவை வீட்டுக்குள் நடப்பதால் அதிகம் பேசப்படுவதில்லை. மற்றும் சமூகம் இதை குடும்ப பிரச்சினை என பொதுப்படுத்துவதால், இதில் உள்ள பிழைகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை.

பாலியல் வன்முறை அறிகுறிகள்
1. உளரீதியான வன்முறை
- இது சொல் மூலமோ செயல் மூலமோ ஏற்படலாம்.
- சொல்- ஏசுதல், திட்டுதல், பெயர்கள் சொல்லி அழைத்தல், - பயமுறுத்துதல்.
- செயல்- தனிப்படுத்தல், ஆதிக்கம் செலுத்தல்.

2. உடல்ரீதியான வன்முறை
அடித்தல், வீசுதல், ஆயுதம் ஒன்றால் அடித்தல்

3. பாலியல் வன்முறை
- உடலுறவுக்கு கட்டாயப்படுத்தல். பொருளாதார வன்முறை
- பணத்தை கட்டுப்படுத்தல்.
- பணம் கொடுக்காமல் இருத்தல்.
- அன்றாட தேவைகளை (உணவு, உடை) புறக்கணித்தல்.
- வேலைக்கு போவதை தடுத்தல்.

4. . பாதிப்புக்கள்
1. உடல்ரீதியாக
- உடலில் புண்கள்.
- லிங்க நோய்கள் ஏற்படுதல்.
- தேவையற்ற கர்ப்பம்.
2. உளரீதியாக
-பயம்.
-நித்திரைக்குறைவு.
-போதை பாவனை.
-மன அழுத்தம்.
-சமுதாயத்தில் இருந்து விலகிச்செல்லுதல்.
தற்கெலை.
3. சமுதாய ரீதியாக
-குடும்பங்களால் நிராகரிப்பு.
-குறைவான பணம் சம்பாதிக்க வாய்ப்பு.
-கற்பழிக்கப்பட்ட பென்களின் குழந்தைகள், குடும்பத்தால் மற்றும் சமுதாய நிராகரிப்பு.

பாலியல் / பாலியல் நிலை வன்முறை தொடர்பான மூடநம்பிக்கைகள்
* பால் நிலை வதையினால் பாதிக்கப்படும் பெண்கள் குறைவு.
உண்மை- பல பெண்கள் பயத்துடன் வாழ்வதால், அவர்களுக்கு உதவும் சேவைகளை நாடமுடியாமல் இருக்கின்றனர்

* பால் நிலைவதை- உடல்ரீதியான வதை மட்டுமாகும்.
உண்மை- இது உளசார் வதையையும் உள்ளடக்கும்.

* வீட்டு வதை சிலறை மாத்திரமே பாதிக்கும்.
உண்மை- எல்லா மத, மொழி மக்களையும் பாதிக்கும்.

* வன்முறை ஒரு குடும்ப விவகாரம்.
உண்மை- இல்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"