பெண்மையின் அழகைப் பிரதிபலிக்கும் முக்கிய அம்சங்களில் அவளது மார்பக வளர்ச்சியும் ஒன்று. ஆனால் சுமார் ஐம்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இன்றி அவதிப்படுவார்கள். சருமப் பிரச்சினை, கூந்தல் பிரச்சினை போன்று இதுவும் அழகு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைதான் என்பது பல பெண்களுக்குப் புரிவதில்லை.
மார்பக வளர்ச்சி பாதிக்க பரம்பரைத் தன்மையும், ஹார்மோன் கோளாறுகளும் காரணங்களாக இருக்கலாம். பரம்பரைத் தன்மைக் கோளாறுகளை உடற்பயிற்சிகள், மசாஜ், உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றிலும் ஹார்மோன் கோளாறுகளை அதற்கான சிகிச்சையாலும் சரியாக்கலாம்.
மார்பகங்கள் சிறுத்துக் காணப்படுவோர் வீட்டிலிருந்தபடியே செய்துகொள்ளக் கூடிய சில பயிற்சிகள் இதோ...
- கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி இருத்தல்.
- நன்றாக நேராக நிமிர்ந்து சரியான நிலையில் உட்கார்ந்து கொண்டு மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் கழித்து வெளி யேற்றுதல்.
- நன்றாக, நேராக நிமிர்ந்து சரியான நிலையில் உட்கார்ந்துகொண்டு மூச்சை உள்ளிழுத்து சிறிது நேரம் கழித்து வெளி யேற்றுதல்.
- கைகள் இரண்டையும் ஸ்கிப்பிங் ஆடுவதுபோல மடக்காமல் சுழற்றுதல்.
- இடுப்பில் கைகளை வைத்தபடி தலையை முன்னும், பின்னுமாகக் குனிதல்.
- கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி தட்டுதல், அதேபால கீழே நீட்டித் தட்டுதல்.
- கைகளை குவித்து வணக்கம் சொல்கிற மாதிரி சிறிது நேரம் உறுதியாக வைத்திருத்தல்.
உடற்பயிற்சிகளைத் தவிர மசாஜ; மூலமும் இப்பிரச்சினையை ஓரளவுக்குக் குணப்படுத்தலாம். தரமான பாலாடை கொண்டு கழுத்தின் மேல் பகுதியிலிருந்து தடவி மார் பகங்கள் வரை நான்கு விரல் களால் வட்டமாக மசாஜ் செய்யவும்.
அதே மாதிரி வயிற்றின் கீழ்ப்பகுதியி லிருந்து மார்பகத்தின் மேல் பகுதி வரை வட்டமாக மசாஜ; செய்யவும். இவற்றையும் தினமும் குறைந்தது பத்து முறைகள் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி மசாஜ தவிர, தினமும் உணவில் நிறைய கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றையும், கொழுப்புச் சத்து அதிகமுள்ள பால், நெய் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மார்பக வளர்ச்சி அதிகமாக இருக்கும் பெண்கள் மசாஜ செய்யக் கூடாது. இவர்கள் உடலை வருத்தும்படியான உடற்பயிற்சிகளை, உதாரணத்திற்கு வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, நடப்பது, ஓடுவது போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
நீராவி சிகிச்சை மூலமும் பெருத்த மார்பகங்களை சிறிய தாக்க முயற்சி செய்யலாம்.
இதைத் தவிர பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலமும் அதிகப்படியான கொழுப்பை அகற்றி, அளவைக் குறைக்கலாம். இவர்கள் பால், நெய், வெண்ணெய், தயிர் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
வேக வைத்த காய் கறிகள், பழங்கள், கீரை, கொழுப்பு நீக்கிய பால், இளநீர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
செயல் முறை காணொளி