சீனாவில் முதன் முறையாக ஆணும் ஆணும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். சீனாவின் சின்ஷென் மாகாணத்தை சேர்ந்த 25 வயதாகும் மார்க் மற்றும் 23 வயதாகும் அன் அன் எனும் இரு இளைஞர்களுமே இல்லற வாழ்வில் இணைந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் ஆளுக்கு ஆள் சத்தியப்பிரமாணம் செய்து தங்களது திருமணத்தை நிறைவுசெய்தனர். திருமணத்திற்காக 50 விருந்தினர்களை இவர்கள் அழைத்திருந்து அவர்களுக்கான சாப்பாட்டினையும் ஆர்டர் செய்திருந்தனர்.எனினும் இவர்களுக்கு ஏமாற்றமே மிச்சமானது காரணம் அங்கு வெறும் ஐந்து பேர் மட்டுமே கலந்த தங்களது ஆசீர்வாதத்தினை தெரிவித்தார்கள். அதில் மார்க் என்பவரின் நண்பிகள் மூவர் அடங்குவர்.
இது பற்றி கருத்தி தெரிவித்த தம்பதிகள் ” நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்தான் இதனால் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளாது. எனினும் இதற்கு நாங்கள் வருந்தப்போவதில்லை. எமது காதல் ஆழமானதும் உறுதியானதும் என தெரிவித்தார்கள்.