கணினியின் லைசன்ஸ் ஐ தேடித்தரும் இலவச மென்பொருள்


கணினியில் முக்கியமான ஒன்று இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்கு தளங்கள். பெரும்பாலும் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன்படுத்துகிறோம்.

நாம் இந்த கணினியில் இந்த இயங்கு தளங்களை நிறுவும் போது அதற்க்கான லைசன்ஸ் மற்றும் சீரியல் எண்ணை சரியாக கொடுத்தால் மட்டுமே இந்த இயங்கு தளத்தை நம் கணினியில் நிறுவ முடியும். ஒரு எண் மாறினால் கூட நிறுவ முடியாது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த எண்ணை நாம் தொலைத்தோ அல்லது மறந்தோ விடுகிறோம் அல்லது மறந்து விடுகின்றோம் என வைத்து கொள்வோம்.

இப்பொழுது நம் கணினியில் ஏதோ ஒரு பிரச்சினையால் இயங்கு தளத்தை திரும்பவும் நிறுவ வேண்டும். இப்பொழுது அந்த எண்ணை மறந்து விட்டதால் நம் கணினியில் நிறுவுவதில் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையில் நமக்கு உதவவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருளில் உங்கள் இயங்கு தளங்கள் மட்டுமின்றி நம் கணினியில் பதிந்துள்ள Nero, VM ware, Ms office ன் Serial எண்ணையும் நமக்கு தெரிவிக்கும்.
  • இந்த மென்பொருளை நம் கணியில் நிறுவ வேண்டாம். தரவிறக்கியவுடன் நேராக இயக்கலாம்.
  • மிகச்சிறிய அளவே உடையது (95kb).
  • 100% பாதுகாப்பான இலவச மென்பொருள்.
மென்பொருளை இலவசமாக தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"