பெண்களை இறுக்கி அணைக்கும் திருட்டு சாமியார்

ஆந்திராவின் பிரபல சாமியார் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தன்னிடம் வரும் பெண்களை கட்டி பிடித்தும், இறுக்கி அணைத்தும் சில்மிஷம் செய்ததாகவும் அந்த சாமியார் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிம்மரிஷி சுபாஷ் பத்திரி என்ற சாமியார் மெகபூப் நகர் மாவட்டம் படுதால் கிராமத்தில் மகேஸ்வரா மகா பிரமிடு என்ற பெயரில் தியான மண்டபம் ஒன்றை நடத்தி வருகிறார். 136 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆசிரமத்தின் மையப்பகுதியில் பிரமிடு போல் பிரமாண்ட கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 40 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தியானம் செய்யலாம்.

இங்கு பெரிய அளவில் தியானம் பயிற்சி நடந்தது. இந்தியா மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தினம் ஒரு லட்சம் பேர் இந்த தியான பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல நடிகர் நடிகைகளும் பங்கேற்றார்கள். அன்றைய தினம் இதில் கலந்து கொண்ட பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரி கட்டிப்பிடித்து ஆசி வழங்கினார்.

அத்துடன் அங்கு பல பெண்களிடம் அவர் சில்மிஷமும் செய்தார். சில பெண்களை பின் பக்கமும் தட்டினார். இதனை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, "டிவி' சேனல்களிடம் அந்த காட்சிகளை கொடுத்து ஒளிபரப்ப செய்து விட்டார். அந்த காட்சிகள் தெலுங்கு சேனல்கள் பலவற்றிலும் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. இதனால் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்பட்டு விட்டது. ஆவேசமடைந்த பெண்கள் அமைப்பினர் ஆசிரமம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சாமியாரை சந்தித்து விளக்கம் கேட்டு அதை ஒளிபரப்புவதற்காக இரண்டு தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் ஆசிரமத்துக்கு சென்றனர்.

அவர்களை ஆசிரம ஊழியர்கள் அடித்து விரட்டினார்கள். நிருபர்கள் வந்த வேனையும் நொறுக்கினார்கள். இதுகுறித்து டி.வி. சேனல் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர். தங்களை தாக்கியதாக ஆசிரம சுபாஷ் பத்ரி சுவாமி, நிர்வாகி விஜய பாஸ்கர ரெட்டி உள்பட 6 பேர் மீது புகார் செய்து உள்ளனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததை முன்னிட்டு சுபாஷ் பத்ரி தப்பி ஓடிவிட்டார். அவர் பெங்களூர் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், தியான மாநாட்டில் பங்கேற்ற நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகள், அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"