மின் புத்தக பிரியர்களுக்கான தேடியந்திரங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் நியோடேக் கொஞ்சம் விஷேசமானதாகவே இருக்கிறது.காரணம் இது தேடியந்திரம் மட்டுமாக இல்லாமல் மின் புத்தகம் சார்ந்த வலைப்பின்னல் சேவையாகவும் திகழ்கிறது.
குறிப்பிட்ட தலைப்பிலான புத்தகம் மின் புத்தக வடிவில் கிடைக்கிறதா?என்பதை தேடுவது சுலபமாகவே இருக்கிறது.புத்தகத்தின் தலைப்பை அடித்ததுமே அதற்கான தேடல் பட்டியல் வந்து நிற்கிறது.
மின் புத்தகம் எந்த வகையில் கிடைக்கிறது,இலவசமா அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டுமா? போன்றவிவரங்களோடு இந்த பட்டியல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு புத்தகத்தை கிளிக் செய்தால் அவற்றுக்கான விவரங்கள் தனியே வந்து நிற்கின்றன.முதல் முறையாக இந்த தளத்தை பயன்படுத்தும் போது இரண்டு விஷயங்கள் நடப்பது நிச்சயம்.முதலில் இந்த தேடியந்திரம் உங்களுக்கு பிடித்துப்போகும்.இரண்டாவதாக மீண்டும் மீண்டும் இந்த தளத்தை பயன்படுத்த தோன்றும்.
தேடும் வேலை இல்லாவிட்டாலும் கூட இந்த தளத்திற்கு வருகை தருவீர்கள்.அதற்கு காரணம் புதிய இபுக்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியே.தேடல் கட்டத்தின் கீழ் சமீபத்தில் இணையவாசிகள் பார்த்த இபுக்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புத்தகமாக கிளிக் செய்தால் புதிய பொக்கிஷங்களை எதிர் கொள்ளலாம்.இப்படி,கடந்த ஒரு வார காலத்தில் பார்க்கப்பட்ட புத்தகங்கள்,ஒரு மாத காலத்தில் பார்க்கப்பட்ட புத்தகங்களையும் பார்க்கலாம்.சமீபத்திய புத்தகத்தையும் பார்க்க முடியும்.
இன்று ஏதாவது புதிய புத்தகம் பட்டியலில் இடம்பெறுகிறதா என்று தெரிந்து கொள்வதற்காகவே தினந்தோறும் விஜயம் செய்யலாம்.மின் புத்தக வடிவில் புதிய புத்தகங்களை அறிமுக செய்தும் கொள்வதோடு அவற்றின் மூலம் வலை நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.அதாவது இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டால் மின் புத்தகம் பற்றிய கருத்துக்களை சக உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அப்படியே புத்தகத்துக்கான மதிப்பீட்டையும் வழங்கலாம்.
மற்ற வலைப்பின்னல் சேவையை போல உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுக பகுதியை உருவாக்கி கொண்டு, சக உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளலாம்.மற்ற் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்கள் படிக்கும் புத்தகம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இப்படி புத்தகம் சார்ந்த கருத்து பரிமாற்றத்தின் மூலம் இணைய நட்பை தேடிக்கொள்ளும் அதே நேரத்தில் புதிய புத்த்கங்களையும் பரிட்சயம் செய்து கொளவதால் வாசிப்பு அனுபவம் விரிவடைந்து மேலும் சுவார்ஸ்யம் உண்டாகும்.
புத்தக பிரியர்களுக்கு ஏற்ற தளம் என்றாலும் இதற்கு வருகை தராமலேயே பிரவுசர் விரிவாக்கம் மூலமே தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.அதோடு ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளையும் குறிப்பீட்டு தேடலாம்.மின் புத்தக வகைகளில் எந்த வகை தேவை என்பதையும் குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.
இணையதளம் செல்ல கீழே சொடுக்குங்க..