எச்சரிக்கை : "செக்ஸ் இங்கே இலவசம்" என்ற வாசகத்துடன் உலா வரும் வைரஸ்.
கடந்த ஆண்டுகளில் "ஐ லவ் யூ""ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கணினிகளை பதம் பார்த்தது.
இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கணினி தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த வைரஸ் சாப்ட்வேர்கள் "ட்ரோஜான்" என்ற பெயருடன் உலா வருகிறது..
இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.
இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கணினிகளை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது.
காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கய்யுடு கூறியதாவது:
ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த "ஐ லவ் யூ" வைரசை ஒத்துள்ளது.புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும்; ட்ரோஜன் சாப்ட்வேரின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.