வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்!


பிரிட்டனில் வீட்டில் வைத்து காதலிக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்து உள்ளார் 28 வயது இளைஞன்ஒருவர்.

வீட்டைச் சுற்றிலும் பனி. பிரசவ வேதனையில் துடிக்கின்ற காதலியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை. வெளியில் இருந்து எவரையும் உதவிக்கு அழைக்கவும் முடியாது.

குழந்தை இப்போதைக்கு பிறக்கக் கூடாது என்று இருவரும் பிரார்த்தித்தனர்.

நிலைமை கட்டு மீறியது.

காதலன் உடனடியாக ஐ-போர்ன் மூலமாக இணையத் தளங்களைப் பார்வையிட்டு குழந்தைக்கு பிரசவம் பார்க்கின்றமை தொடர்பான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் குறிப்புக்களை தெரிந்து கொண்டார். காதலியுடன் பகிர்ந்து கொண்டார்.

வேறு ஆட்களின் துணை இல்லாமலே பிரசவம் இனிதே நடந்தது.

தாயும், சேயும் நலமாக உள்ளார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"