நம்முடைய எல்லா வயதிலும் நமக்கு கதை சொல்லி தேவைப்படுகிறார். பாட்டி, அம்மா, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் என எல்லா நிலைகளிலும் கதை சொல்லியாக இருப்பவர்கள் நமது மனதில் நீங்கா இடத்தைப் பெற்று விடுகின்றனர். நமது மனம் எப்போதும் ஏதோ விதத்தில், ஏதோ உருவத்தில் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. கதைகள் நம்முடைய வாழ்வோடு கலந்தவை. நமது வாழ்க்கையை சில நேரங்களில் வழி நடத்துவதும் கதைகளே.
இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில்நுட்பம் நமக்கு கொடுத்திருக்கும் வசதிகளையும் பயன்படுத்தி கூடு இணைய வாசகர்களுக்காக புதிதாக கொண்டுவரப்பட்டதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. இந்த கதை சொல்லிப் பகுதியில் நமக்கு பிடித்த எழுத்தாளர்கள், கிராமங்களில் வாழும் உண்மையான கதைசொல்லிகள், பல தலைமுறைகள் கடந்து வாழும் பாட்டிகள், திரைப்படக் கலைஞர்கள், குழந்தைகள் என் எல்லோரும் கதை சொல்லியாக உங்களை சந்திக்க அல்லது உங்களுடன் உரையாட வருகிறார்கள்.
இந்தக் கதை சொல்லிப் பகுதி முழுக்க முழுக்க ஒலி வடிவத்தில் மட்டுமே கிடைக்கும். இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து (Download) அலைபேசி, இசைக் குறுந்தகடுகள், ஐ பாட், போன்றவற்றில் இணைத்து உங்கள் பயணங்களில், உங்கள் ஓய்வு நேரங்களில் அவைகளை கேட்டு மகிழலாம். உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் உங்களோடு பேசிக் கொண்டே வருவது போன்ற ஒரு அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கப் போவதே இந்தக் கதை சொல்லிப் பகுதி. உங்கள் தனிமையை நீங்கள் நேசிக்கும் கதைசொல்லி, எழுத்தாளர், திரைக் கலைஞர்களோடு பகிந்துக் கொள்ளுங்கள்.
இணையதளம் செல்ல செல்ல கீழே சொடுக்கவும்