விந்தை திருடி குழந்தை பெற்றுவிட்டாள்: மாஜி காதலி மீது புகார்


லூசியானாவில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரின் உயிர் அணுவை திருடி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்தவர் லேன் ஹார்டின். கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரும் அவருடைய அப்போதைய காதலி கேத்ரின் லெப்லான்கும் சேர்ந்து டெக்சாஸ் ஆன்ட்ராலஜி சர்வீசஸ் என்னும் கிளினிக்கில் உயிர் அணு மற்றும் கருமுட்டையை பாதுகாத்து வைத்தனர்.

இதையடுத்து கேத்ரீன் ஹார்டினை பிரிந்தார். இந்நிலையில் டோபி டேவல் என்ற பெண் ஹார்டினை காதலித்து பின்னர் அவரும் பிரிந்தார். தற்போது டோபிக்கு 2 வயதில் மகன் உள்ளார். அவர் ஹார்டினைப் பிரிந்த பிறகு டெக்சாஸ் கிளினிக்கிற்கு சென்று தனது முன்னாள் காதலனின் உயிர் அணுவை பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றார்.

இந்நிலையில் டோபி தனது உயிர் அணுவை திருடி குழந்தை பெற்ற விஷயம் அறிந்த ஹார்டின் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஹாரிஸ் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வரும் 22ம் தேதி துவங்குகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"