பிரித்தானிய பெண்கள் செக்ஸை காட்டிலும் சாக்கலேட்டுக்களை பெரிதும் விரும்புகின்றனர் என்று அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்து உள்ளது.
இக்கருத்துக் கணிப்புக்காக 2000 பெண்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.வைன், செக்ஸ், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் சாக்கலேட்டுக்கள் மீது அதிகம் ஆசை வைத்து இருக்கின்றனர் என்று இந்த கணிப்பின் முடிவு கூறுகின்றது.
2.3 மில்லியன் பிரித்தானிய பெண்கள் சாக்கலேட்டுக்கள் மீது பேராவல் வைத்து இருக்கின்றார்கள் என்றும் பிரிட்டன் பெண்கள் குறைந்தது ஒரு நாளில் மூன்று தடவைகளேனும் சொக்கலேட்டுக்களை சாப்பிடுகின்றனர் என்றும் இந்த கணிப்பில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு நாளும் சாக்கலேட்டுக்களை பற்றியே அதிகம் யோசிக்கின்றனர் என்றும் 18 சதவீதம் ஆனோர் மாத்திரமே செக்ஸை பற்றி அதிகம் யோசிக்கின்றனர் என்றும் கணிப்பு கூறுகின்றது.
சாக்கலேட்டுக்களுக்கு முன்னால் செக்ஸுக்கு குட் பை சொல்லி விடுவார்கள் என்று ஐந்தில் ஒரு பங்கு பெண்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
பிரிட்டன் ஆண்களும் இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் பிரித்தானிய ஆண்களை பொறுத்த வரை எழுந்தமானமாக 10 பேரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 06 பேர் ஒவ்வொரு நாளும் செக்ஸ் பற்றியே அதிகம் சிந்திக்கின்றனர் என்றும் 11 சதவீதமானவர்கள் மாத்திரம்சாக்கலேட்டுக்கள் மீது அலாதிப் பிரியம் வைத்திருக்கின்றனர் என்றும் அறிய வந்துள்ளது.