பேஸ்புக்கில் மலர்ந்த காதலியுடன் உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு மறுத்த சிவில் இன்ஜினியர்

உல்லாசமாக இருந்த காதலியை திருமணம் செய்ய மறுத்த சிவில் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார். கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ரங்காநகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் பாலாஜி(29). சிவில் இன்ஜினியர்.

ஜோதிபுரத்தை சேர்ந்தவர் விமலா(28)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, பாலாஜிக் கும், விமலாவுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

காதலனை பார்ப்பதற்காக வேலையைவிட்டு நின்று வீட்டிலேயே தங்கினார். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்தனர். பாலாஜி, விமலாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையில் இருவரும் பாலக்காடு, ஊட்டிக்கு சென்று பல முறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விமலா, பாலாஜியிடம் கூறி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விமலா துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"