(Passport) கடவுச்சீட்டில் முழு நிர்வாணப் படம்!


சைப்பிரஸ் நாட்டின் புதிய கடவுச்சீட்டில் காதல் தெய்வத்தின் நிர்வாணப் படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இக்காதல் தெய்வம் புரதான கிரேக்கர்களால் வழிபடப்பட்டு வந்திருக்கின்றது.ஆனால் இந்நிர்வாணப் படத்தை கடவுச்சீட்டில் வெளியிடுகின்றபோது சைப்பிரஸ் அரசு உள்நாட்டு இராஜதந்திரிகளின் ஆலோசனைகளையோ, வழிகாட்டல்களையோ, அறிவுறுத்தல்களையோ கோரி இருக்கவில்லை.

இந்நிர்வாணப் படம் வெளியிடப்பட்டிருக்கின்றமைக்கு சைப்பிரஸ் இராஜதந்திரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டு உள்ளனர்.

நாட்டின் நற்பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்றும் இக்கடவுச்சீட்டுடன் முஸ்லிம் நாடுகளுக்கு செல்கின்றபோது சைப்பிரஸ் பிரஜைகள் தேவை இல்லாத அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரும் என்றும் இந்த இராஜதந்திரிகள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஆனால் இனி மேல் எதுவும் செய்ய முடியாது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"