லஞ்ச வருமானத்தில் 46 துணைவியாருடன் உல்லாசமாக வாழ்ந்த சீன அதிகாரி

சீன நாட்டில் பெரும் பணக்காரர்களும், பிரபலமானவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட துணைவியார்களை வைத்திருப்பது அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதாகக் கருதப்படுகின்றது. இதன் மூலம் அந்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இத்தகைய மகளிரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களுடன் இணைந்துள்ள ஆண்களின் ஊழல்களை கண்டறிந்து விடுகின்றனர்.

சமீபத்தில், இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது ஷாங்க்டாங் மாகாணத்தின் முன்னாள் கவர்னராக இருந்த ஹுவான் செங் ஆவார். அரசாங்க நிலங்களை விற்றதாகவும், அரசுத் திட்டங்களுக்கு லஞ்சம் பெற்றதாகவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு தனியார் சொத்துக்களை பெற்றுத் தந்து அதிக லாபம் சம்பாதித்தாதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இவர் 46 துணைவிகளுடன் உல்லாசமாக வாழ்வதற்காகவே அவர்களுக்கென ஒரு பெரிய மாளிகையையே நிர்மாணித்துள்ளார். அவருடைய லஞ்ச வருமானத்தில்தான் துணைவியர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து உள்ளனர்.

கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்த இவர், தன்னுடைய பதவிக்கும் மேற்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்வாக்கு மிக்கவர்களுக்கு காரியம் சாதித்துக் கொடுத்து லஞ்சம் பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர் குறித்து விசாரணை மேலும் நான்ஜிங் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"