அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லங்கமான சிக்கல் ஒன்றை சந்தித்துள்ளது. இவர்கள் 18-24 வயதான இளம் பெண்களிடம் கேள்விகளைக் கேட்டதே சிக்கலுக்கு காரணம். இக்கேள்விகள் அனைத்தும் செக்ஸ் தொடர்பானவையாம் ! இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பலத்த சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
புளோரிடா மாநில சுகாதார அமைச்சால் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் இடம்பெற்றுள்ள கேள்விகளில் ஒன்று, கடந்த வருடம் மொத்தம் எத்தனை ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டீர்கள்? சர்வேயில் கலந்துகொண்டு பதிலளிக்கும் பெண்களுக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், 10 டாலர் பெறுமதியான gift card வழங்கப்படுகிறது.
செக்ஸ் தொடர்பான கேள்விகள் அடங்கிய சர்வே, புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் 18-24 வயதான இளம் பெண்களுக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. விரும்பினால், பதில் அளிக்கலாம், பதில் அளித்தால், 10 டாலர் பெறுமதியான gift card வழங்கப்படும் என்ற குறிப்புடன்.
மாநில அரசு ப்ராஜெக்ட் என்பதால், 18-24 வயதுள்ள பெண்கள் பெயர்கள், முகவரிகள், மற்றும் விபரங்கள் அனைத்தும் அவர்களின் கம்ப்யூட்டர் பதிவுகளில் உள்ளன. அந்த லிஸ்ட்டில் இருந்தே சர்வே பல ஆயிரக் கணக்கான பெண்களுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கான செலவு மட்டும், 45,000.00 டாலர்.ஆனால், இங்கு நடைபெற்ற பெரிய குளறுபடி என்னவென்றால், கம்ப்யூட்டர் பெயர்களை தேர்ந்தெடுத்தபோது, 18 வயதுக்கு குறைவான பெண்களின் பெயர்களையும் தேர்ந்தெடுத்து விட்டது. இதனால், பள்ளி மாணவிகளுக்கும் சர்வே வந்து சேர்ந்திருக்கிறது.
சில பெண்கள் அமைப்புகள் இதற்கெதிராக எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.