மனைவியை கற்பழிக்க விளம்பரம் கொடுத்த கணவன்

மனைவியை கற்பழிக்க ஆட்கள் தேவை என, விளம்பரம் கொடுத்த கணவனை, அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவில் உள்ள ஐடஹோ மாகாணத்தில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு பெண், அடையாளம் தெரியாத நபர், தன்னை கற்பழிக்க முயற்சிப்பதாக, போலீசுக்கு போன் செய்தார். போலீசார் வருவதற்குள், அந்த நபர், அப்பெண்ணிடமிருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.

இந்நிலையில், இதே பெண்ணிடமிருந்து, போலீசுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. மற்றொரு நபர், என்னை கற்பழிக்க முயற்சிக்கிறார்; விரைந்து வாருங்கள் என, கூறினார். போலீசார் சென்ற போது, துப்பாக்கி முனையில், ஒருவனை பிடித்து வைத்திருந்தார் அந்த பெண்.பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரித்த போது, கற்பழிக்க வந்தவர் பெயர் மைக்கேல் கோம்ஸ் என்பது தெரியவந்தது.

தனக்கு, இ-மெயில் மூலம், ஒரு விளம்பரம் வந்ததாகவும், அதில், இந்த பெண்ணின் கணவர், தன் மனைவியை கற்பழிக்க, தகுந்த ஆள் தேவை என, கூறியிருந்ததாகவும், மைக்கேல் கோம்ஸ், தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

என் மனைவி எவ்வளவு எதிர்த்தாலும், நின்று விடாதீர்கள். அவளுக்கு கற்பழிக்க முயற்சிக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என, இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, அந்த பெண்ணின் கணவரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பிரிவுகளில், வழக்கு போடப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"