கருப்பு வெள்ளையில் பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய மர்லின் மன்றோ முகம் தெரியாத நபர் ஒருவருடன் உறவு கொள்ளும் நிர்வாண வீடியோ ஒன்றை அமெரிக்காவின் மெனகாட்டன் பகுதி தொழிலதிபர் ஒருவர் மெனக்கெட்டு வாங்கியிருக்கிறார்.
விலை அதிகமில்லை ஜெண்டில் மேன் 1.5 மில்லியன் டாலர்கள் தான்.
இந்த வீடியோவை இணையத்தில் இடுவதோ, விற்பனை செய்வதோ வாங்கியவரின் நோக்கமில்லையாம். ரகசியக் கனவுகள் போல பாதுகாக்கப் போகிறாராம்.
தனது 36 வது வயதில் படுக்கையறையில் நிர்வாணமாய் இறந்து கிடந்த மர்லின் மன்றோ அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடியுடன் கலவிக் காதல் கொண்டிருந்ததாக தகவல் ஒன்று உண்டு.
ஏற்கனவே கென்னடியின் பாலியல் பலவீனங்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் இந்த தகவலும் உண்மையே என பெரும்பாலானவர்கள் ஒத்துக் கொள்கின்றனர். எனினும் இந்த வீடியோவில் இருப்பது கென்னடியா ? என்பது தெரியவில்லை.
இந்த வீடியோ ஒரு பிரதி எஃப்.பி.ஐ யிடம் விசாரணைக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. கொடுத்தவர் ஒரு பிரதியை தன்னிடம் வைத்திருந்தார். மர்லின் மன்றோவின் “கணவன்களில் ஒருவரான” ஜோ டி மாகியோ அவரிடமிருந்து இந்த வீடியோவை வாங்க பெரும் பிரயர்த்தனம் செய்தார். $25,000 டாலர்களுக்கு அந்த வீடியோவைத் தருமாறு அவர் பலமுறை விண்ணப்பித்தும் அந்த நபர் மறுத்துவிட்டார்.
இப்போது அந்த நபருடைய மகன், சும்மா இருக்கிறதே என்று ரகசியமாய் அதை விற்பனை செய்யப் போக, அது 1.5 மில்லியன் டாலர் என அவனையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.