நிர்வாண விமானப் பயணத்திற்கு கிழக்கு ஜெர்மனியிலுள்ள விமான நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்து பால்டிக் கடற்கரை வரை செல்லும் இந்தப் பயணத்தில் பயணிகள் அனைவரும் நிர்வாணமாகப் பயணிக்கலாம் என உற்சாக அழைப்பு விடுத்திருக்கிறது அந்த நிறுவனம்.
விமானத்தில் ஏறும் வரை உடை அணிந்து வரவேண்டும் என்றும், விமானத்திற்குள் வந்தபின் உடை களைந்து நிர்வாணமாக திரியலாம் எனவும் , செல்லுமிடம் சென்று சேர்ந்தபின் மீண்டும் உடை அணிந்து கொண்டு விமானத்திலிருந்து இறங்க வேண்டும் எனவும் “ஒழுங்கு” முறை வரையறுக்கப்பட்டுள்ளது.
ஐம்பத்து ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்துக்கான முன்பதிவு துவங்கி விட்டதாம்.
நேச்சுரிசம் எனப்படும் நிர்வாண விரும்பிகள் கிழக்கு ஜெர்மனியில் அதிகம். நாசிகளால் தடை செய்யப்பட்டு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் மீண்டும் அந்த எண்ணம் கிளர்ந்து எழுந்திருக்கிறது.
நிர்வாணமாய் அமர்ந்து உணவு உண்ணும் சிறப்பு உணவகங்கள் கூட கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இப்போது நிர்வாண விமானப் பயணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த யோசனையைச் சொன்னதே ஒரு வாடிக்கையாளர் தான் என்கின்றனர் நிறுவனத்தினர்.