அழகிகளுடன் ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள் !


IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகம் பிரபலமில்லாத மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள் இருந்ததாகவும், அவர்கள் ஸ்ரீசாந்துடன் 5 முதல் 6 பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீசாந்த் பல்வேறு பெண்களுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களும் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. டாமரின்ட் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் ஸ்ரீசாந்துக்கும் அவரது தரகர் ஜிஜு ஜனார்தனனுக்கும் சோபிடெல் ஹோட்டலில் 1213 மற்றும் 1214 ஆகிய எண்கள் கொண்ட அறைகளை முன்பதிவு செய்துள்ளது. அந்த அறைகளில் தான் அவர்கள் தங்கியிருந்தனர்.

அறை எண் 1213ல் தங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஜுஹுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 15ம் தேதி சென்றுள்ளார். மேலும் கார் லிங்க் ரோட்டில் உள்ல ஓர்ஆர்ஜி கிளப்புக்கு சென்ற அவர் அங்கு பல மணிநேரம் இருந்தாராம். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான டைரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில் ஸ்ரீசாந்த் தனது நடவடிக்கைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். மாடலிங் உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தனக்கு கிடைத்த பண விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் கேரளாவைச் சேர்ந்த 2 தரகர்களின் பெயர்கள் மற்றும் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூரைச் சேர்ந்த தரகர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை எழுதி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

சில தரகர்களின் பெயருடன் சேர்த்து சர், பாஸ், பிஜி என்று அவர் டைரிகளில் எழுதி வைத்துள்ளார். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து ஒரு லேப்டாப், ஐபேட், 2 செல்போன் சார்ஜர்கள் மற்றும் ரூ.75,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"