வன்புணர்ந்த தந்தையின் தலையை துண்டித்த மகள்!


தன்னை வன்புணர்ந்த தந்தையின் தலையை துண்டித்து மகளே தந்தைக்கு தண்டனை கொடுத்துள்ளார்.

பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த சமயம் தந்தையால் தொடர்ந்து பலமுறை வன்புணரப் பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் தந்தையின் தலையை அரிவாளால் வெட்டினார்.

இதில் தந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், தந்தையைக் கொலை செய்த இளம் பெண்ணை கைது செய்ய முயன்றனர்.

ஆனால்அந்த கிராமமே ஒன்று திரண்டு ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அந்த இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்வதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

மேலும் இளம் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவே இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறி அந்த இளம் பெண்ணை ஊர் மக்கள் கைதிலிருந்து காப்பாற்றியுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"