ஓரின சேர்க்கை திருமணம் தடை நீக்கம்: அமெரிக்காவில் லெஸ்பியன் ஜோடி திருமணம்


ஓரின சேர்க்கை திருமண தடை சட்டம் நீக்கியவுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அமெரிக்காவில் 12 மாகாணங்களில் மட்டுமே ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமண தடை சட்டம் அமலில் இருந்தது. இதை எதிர்த்து அமெரிக்கா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஓரின சேர்க்கை , திருமணம்,லெஸ்பியன் அதைத்தொடர்ந்து சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், கலிபோர்னியா மாகாணத்தில் அமலில் உள்ள ஓரின சேர்க்கையாளர் திருமண தடை சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தடை சட்டம் நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் ஒரு லெஸ்பியன் (பெண் ஓரின சேர்க்கையாளர்) ஜோடி சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமணம் செய்து கொண்டது.

அவர்களது பெயர் கிறிஸ்டின் பெர்ரி- காண்டிஸ்டியர். இவர்களுக்கு கலிபோர்னியாவின் அரசு வக்கீல் கமலா ஹாரிஸ் திருமணம் நடத்தி வைத்தார். இனி நீங்கள் இருவரும் கணவன்- மனைவியாக வாழுங்கள் என அவர் வாழ்த்தினார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"