கணவரின் பிறப்பு உறுப்பை வெட்டிய பெண்


அமெரிக்காவில் கணவரின் பிறப்பு உறுப்பை வெட்டி குப்பை தொட்டியில் போட்ட பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கேத்தரின் கியூ(50). இவருக்கும், கணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். கடந்த 2011 ஜூலையில் ஒரு நாள், கியூவின் கணவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது ஆத்திரத்தில் இருந்த கியூ, அவரை கட்டிலோடு சேர்த்து கயிறால் கட்டினார். அதன்பின், காய் நறுக்கும் கத்தியை எடுத்து வந்து அவரது பிறப்பு உறுப்பை வெட்டி அதை குப்பை தொட்டியில் போட்டு விட்டார். வலியால் தூக்கம் கலைந்த கணவர், கத்தியுடன் நின்ற கியூவை பார்த்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வழக்கு ஆரஞ்ச் கவுன்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கியூவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கியூவுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகே பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும். கியூவின் வழக்கறிஞர் கூறுகையில்,அந்த பெண் தனது கணவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அதனால், மன உளைச்சலில் இருந்திருக்கிறார்’ என்றார். பாதிக்கப்பட்ட கணவரோ, ‘எனது வாழ்வின் ஒரு பகுதியை இழந்து விட்டேன். இனிமேல் என்ன செய்யப் போகிறேன்’ என்று கதறுகிறார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"