தோழியை கற்பழிக்க உடந்தையாக இருந்த சகோதரி!


உத்தரபிரதேசத்தில் ஒரு பெண் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டுள்ளதும் இதற்கு வாலிபரின் சகோதரி உடந்தையாக இருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் கோச்சிங் வகுப்பிற்கு சென்றுக்கொண்டிருந்த 21 வயது இளம்பெண், அவருடன் வகுப்பில் பயிலும் 2 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிதாப்பூரை சேர்ந்த அந்த பெண்ணை, அவருடன் ஒரே வகுப்பில் படிக்கும் ராகுல் மற்றும் ராகுல் குமார் என்னும் இரண்டு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செயதுள்ளனர். இந்த கொடுமைக்கு ராகுல் குமாரின் சகோதரி ரிங்கி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து தற்போதுதான் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இரண்டு வாலிபர்கள் மற்றும் சகோதரியை மேமூதாபாத் பகுதியில் கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதால் தொடர்ந்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"