கணவனுக்கு துரோகம் செய்தவள் : கள்ள காதலனாலேயே கொலை!


சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4 ஆவது பிளாக்கை சேர்ந்தவர் சீனிவாசன். மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பலதா(35). துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று சீனிவாசன் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகள் ஓவியா(10). பள்ளிக்கு சென்று விட்டார். புஷ்பதலா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஓவியா பள்ளி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் புஷ்பலதா நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாய் மூலம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஓவியா அருகில் வசிக்கும் பாட்டி வசந்தா வீட்டுக்கு சென்று தெரிவித்தார். வசந்தா வந்து பார்த்தார். பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் சேவியர், உதவி கமிஷனர்கள் கோவி மனோகரன், விஜயராகவன், லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் சம்பத், நடராஜன், சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கள்ளக்காதல் தகராறில் கொலை நடந்தது தெரிய வந்தது. புஷ்பலதா வேலை பார்த்த ஏற்றுமதி நிறுவனத்தில் செங்குன்றத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. புஷ்பலதா வீட்டுக்கு பகலில் ராமகிருஷ்ணன் வந்து செல்வது வழக்கம். நேற்றும் அதுபோல் வந்து புஷ்பலதாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பின்னர் நடந்த தகராறில் புஷ்ப லதாவை ராமகிருஷ்ணன் கொலை செய்து விட்டு 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். புஷ்பலதா வீட்டுக்கு ராமகிருஷ்ணன் வந்து சென்றதை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ராமகிருஷ்ணனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"