உலகின் முக்கிய இடங்களை 3 நிமிட வீடியோவில் தொகுத்து சாதனை !!ரிக் மேரெக்கி எனும் இளைஞர் சமீபத்தில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ள 3 நிமிட நேர வீடியோ தொகுப்பு அதிக எண்ணிக்கையான பார்வையாளர்களை ஈர்த்து வருவதுடன் ஓர் உலக சாதனை முயற்சியாகவும் உருவாகியுள்ளது.

சுமார் 3 வருடங்களாக உலகின் முக்கிய இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துப் பெற வேண்டிய அனுபவத்தை வெறும் மூன்றே இடங்களில் இந்த வீடியோ தருவதே இதன் சிறப்பு அம்சமாகும்.

ரிக் மேரெக்கியுடன் அவரின் இன்னும் இரு நண்பர்கள் இணைந்து உலகில் கண்ணைக் கவரும் இடங்களையுடைய 11 நாடுகளுக்குப் பயணித்து 44 நாட்களாக அயராது உழைத்து இந்த சிறிய திரைப்படம் என்று சொல்லத் தக்க வீடியோவை உருவாக்கியுள்ளனர். இவர்களின் கடின முயற்சிக்குப் பின்னால் இந்த ஆச்சரியமான புள்ளி விபரங்கள் உள்ளன..

இந்த வீடியோவை உருவாக்குவதற்காக...
1. 18 விமானங்களில் ஏறியுள்ளனர்
2. 38 000 மைல்கள் பயணித்துள்ளனர்
3. 2 கமெராக்கள் மட்டுமே உபயோகித்துள்ளனர்
4. சுமார் ஒரு டெராபைட் அளவுடைய வீடியோவைப் பதிந்து உள்ளனர்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"