வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் வழி முறைகள் !!

 
வெளிநாட்டில் குறைந்தது 2 ஆண்டுகளாவது தங்கி இருந்திருக்க வேண்டும் என்பதோடு, இறக்குமதி செய்கிற கார் அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும். அதிலும் கூட, 3 ஆண்டுக்கும் மேலான பழைய காரை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி இல்லை. இடது பக்க ஸ்டீயரிங் கொண்ட கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியாது. (தூதரக அதிகாரிகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு)

இறக்குமதி செய்யும் போது, ஒரு ஆண்டு பழைய கார் என்றால், 16 சதவிகிதமும், 2-3 ஆண்டுகளுக்குள்ளான கார் என்றால், 12 சதவிகிதமும் மதிப்பிறக்கம் (Depreciation) செய்ய சட்டத்தில் இடம் உண்டு. அதாவது, 2 ஆண்டுகளுக்கு மேலான கார் எனும்போது, காரின் விலையில் இருந்து அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மதிப்பிறக்கம் செய்ய முடியும்.

ஓபன் ஜெனரல் லைசன்ஸ் :
இந்த முறைப்படி 40,000 அமெரிக்க டாலருக்கு மேல் விலை கொண்ட, 3,000 CCக்கும் மேல் இன்ஜின் திறன்கொண்ட பெட்ரோல் கார் அல்லது 2,500 CCக்கும் மேல் திறன்கொண்ட டீசல் கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இதற்கு இறக்குமதிக்கான வரி காரின் விலையில் 169 சதவிகிதம். வெளிநாட்டிலிருந்து இங்கே எடுத்து வர ஆகும் ஷிப்பிங் கட்டணம் தனி. தவிர மேற்படி காரை நம்மூரில் ஓட்டுவதற்கான பதிவு செய்ய, சாலை வரிக்கட்டணமாக 20 சதவிகிதமும், இன்ஷூரன்ஸ் 3.5 சதவிகிதமும் கட்ட வேண்டும்.

40,000 டாலரை விடக் குறைவான விலை கொண்ட பெட்ரோல் கார்கள், அல்லது டீசல் கார்களுக்கு வரி 137 சதவிகிதம். காரை நீங்கள் இறக்குமதி செய்தவுடன், அதை புனேவில் உள்ள அராய் (Automotive Research Association of India) அலுவலகத்தில் ஒப்படைத்து ஹோம் அலகேஷன் சான்றிதழ் பெற வேண்டும். அந்தச் சான்றிதழ் பெற்று காரை நாம் திரும்பப் பெற குறைந்தது 1 வருடம் வரை ஆகும். அது மட்டுமல்ல, இதற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

டிரான்ஸ்ஃபர் ஆஃப் ரெசிடென்ஸ் :
இந்த முறையின்படி வெளிநாட்டில் ஏற்கனவே நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடியும். இதற்கு 170 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். மேலும், வெளிநாட்டில் யார் காரை வைத்திருக்கிறார்களோ, அவர் இந்தியாவிற்கு நிரந்தரமாக திரும்பி குடியமருகிறார் என்றால் மட்டுமே இந்த முறையில் இறக்குமதி செய்ய முடியும்.



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"