கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை


பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 53). ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி ஆரோக்ய மேரி. இவர்களுக்கு 12 வயதில் சகாய மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும், 10 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.

மனைவி ஆரோக்கிய மேரி கடந்த 2010-ம் ஆண்டு இறந்துவிட்டார். குழந்தைகளை பராமரிக்க முடியாததால் பாலசுப்ரமணி 3 குழந்தைகளையும் திருப்பூர் மாவட்டத்தில் அலகுமலையில் உள்ள குழந்தைகள் பசுமை பூங்காவில் சேர்த்தார்.

குழந்தைகளை அடிக்கடி வந்து பாலசுப்ரமணியம் பார்த்து சென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்பகத்திற்கு வந்த பாலசுப்ரமணி மேலாளர் வியகுல மேரியிடம் மகளுக்கு மொட்டை போட வேண்டும். அதற்காக பழனிக்கு அழைத்து செல்கிறேன் என்று கூறி காப்பகத்தில் இருந்த மகளை அழைத்து சென்றார்.

வெளியே சென்றதும் சகாய மேரியிடம் பாலசுப்ரமணி புதுத்துணி எடுக்கவேண்டும் என்று கூறி திருப்பூர் காதர்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சகாய மேரியை பாலியல் பலாத்காரம் செய்தார். தந்தையின் இச்செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமி தத்நியிடம் இருந்து தப்பி காப்பகத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு கடந்த 2 நாட்களாக அழுதுகொண்டு யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இதைபார்த்த மேலாளர் வியகுலமேரி சிறுமியிடம் விசாரித்தார். அப்போது தந்தை அழைத்து சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறினார்.

இதுகுறித்து வியகுலமேரி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பாலசுப்ரமணியை கைது செய்தனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"