மனித மூளையை கணினியுடன் இணைக்கும் BCI தொழிநுட்ப ஆராய்ச்சி!!


BCI (brain computer interface) தொழிநுட்பம் மனித மூளையை கணினியுடன் இணைக்கும் ஆராய்ச்சியானது இயற்கையான மனித மூளையானது செயற்கையாக கொடுக்கப்படும் தகவல்களை ஏற்று அதன்படி நடக்க வைக்கப்படுகிறது.

உடல் ஊனமுற்றோருக்கு இது ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். இதற்கான முதல் ஆராய்ச்சியானது 1970ல் மேற்கொள்ளப்பட்டது. பின் இந்த தொழிநுட்பம் குரங்கில் எலக்ரோட் வைத்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இதற்கான ஆரம்பகால படிப்புகள் 1990ல் எலிகளில் மேற்க்கொள்ளப்பட்டு ஆராய்ச்சிகள் தொடங்கி சாதனை படைக்க ஆரமித்தன.

உதாரணமாக உங்கள் கையில் ஏற்பட்டிருக்கும் தசை சிதைவால் முளையில் இருந்து வரும் தகவலை பெற்று கை இயங்க முடியாமல் இருக்கும் போது அந்த கையில் பொறுத்தப்பட்டிருக்கும் எலக்ரோட் ஆனது மூளை இதைத் தான் சொல்கிறது என்று கைகளை மூளையின் தகவலை பெற வைக்கிறது.

நீங்கள் நினைக்கும் ஒன்றை ஒரு கணினி செய்துவிட்டால் அப்பாடா வேலை மிச்சம் என்று தானே நினைக்கத் தோன்றும். அதைத் தான் இந்த தொழிநுட்பம் செய்கிறது.

மூளையில் பொறுத்தப்படும் இந்த சென்ஸ்சார்கள் நரம்பு மண்டலத்தின் அசைவுகளை புரிந்து வைத்திருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்கள், எதை நினைப்பீர்கள் என அதற்கு தெரியும். அதற்கான கட்டுப்பாட்டினை சென்ஸ்சாரானது பெற்ற பிறகு அதற்கான வேலையை தொடங்கிவிடும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"