நிச்சயதார்த்தம் முடிந்த ஆசிரியை பாதிரியாருடன் ஓட்டம்!

தன்னுடைய திருமண நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமான சம்பவம் கன்னியாகுமரியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள வயலாங்கரை தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கேரளாவைச் சேர்ந்த பீட்டர் என்ற மதபோதகர் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வந்த பிலோமினா என்பவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பாதிரியார் பீட்டர் வேலை செய்யும் தேவாலயத்துக்குப் பிரார்த்தனைக்காக அடிக்கடி சென்று வரும் ஆசிரியை பிலோமினாவுக்கும் பீட்டருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

மத போதகருக்கும் தம் மகளுக்கும் இடையிலான பழக்கத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் அதனைக் கண்டித்துள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் நித்திரவிளையைச் சேர்ந்த ஓட்டர் மேலாளர் ஒருவருக்கு பிலோமினாவைத் திருமணம் செய்விக்க பெற்றோர் பார்த்து பேசியுள்ளனர். அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பிலோமினாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சர்ச்சில் வைத்து நடந்த இந்த நிச்சயதார்த்தத்தை பாதிரியார் பீட்டர்தான் நடத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் திடீரென பிலோமினாவும் பாதிரியாரும் மாயமாகினர். மார்த்தாண்டம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்ற பிலோமினாவைக் காணாமல் பெற்றோர் தேடிக்கொண்டிருக்கும்போது, பாதிரியார் பீட்டர் பீலோமினாவின் பெற்றோரைத் தொடர்புகொண்டு, எங்களைத் தேடவேண்டாம்; நாங்கள் இணைந்து வாழ முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடந்த பிலோமினாவின் பெற்றோர், தம் மகளை பாதிரியார் பீட்டர் கடத்திச் சென்றதாக களியாக்காவிளை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிலோமினாவையும் பாதிரியார் பீட்டரையும் தேடி வருகின்றனர். நிச்சயதார்த்தம் செய்து வைத்த பாதிரியாருடனேயே மணப்பெண் தலைமறைவான இச்சம்பவம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"