பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண திருடர்கள்


கோவா கடற்கரை சாலையில் இரண்டு திருடர்கள் நிர்வாணமாக நின்று சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகளை வழிமறித்து செல்போன், பணம் போன்ற பொருட்களை திருடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் சிலர் ஒன்று சேர்ந்து இரண்டு நிர்வாண திருடர்களையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவாவில் உள்ள பெட்டூல் என்ற சாலையில் இரண்டு இளைஞர்கள் நிர்வாணமாக நின்று சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை வழிமறித்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பர்ஸ் போன்றவற்றை திருடியவாறு இருந்தனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் இரு இளைஞர்களையும் சரமாரியாக அடித்து உதைத்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் நிர்வாண திருடர்களை கைது செய்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் ஏற்கனவே இருவரும் பல இடங்களில் இதுமாதிரி நிர்வாணமாக சாலையில் நின்று பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி திருடி வந்தது தெரிய வந்துள்ளது. இருவர் மீது வழிப்பறி, கொள்ளை போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"